ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பழம்பெரும் நடிகர் ரங்காராவ். தமிழ், தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் கொடிகட்டி பறந்தவர். மாயாபஜார் படத்தில் கடோத்கஜனாக நடித்து "கல்யாண சமையல் சாதம்..." என பாடி பட்சணங்களை அவர் காலி செய்யும் காட்சி இன்றைக்கும் பிரபலம்.
இப்போது அவரது பேரன் ஜூனியர் ரங்காராவ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்த தெலுங்கு படமான மிஸ்டர் 7ஐ தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நினைக்கிறார் ஜூனியர் ரங்காராவ். "தாத்தாவுக்கு தமிழ் நாட்டில் எவ்வளபு மதிப்பு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த மதிப்பு குறையாத வகையில் நடந்து கொள்வேன். மிஸ்டர் 7 தெலுங்கில் நான் ஹீரோவாக நடித்த படம். அதன் பிறகு தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறேன். தமிழிலும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்" என்கிறார் ஜூனியர் ரங்காராவ்.