விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பொதுவாக இளையராஜா திகில் படங்களுக்கு இசை அமைப்பது மிகவும் குறைவு. இசை மக்களை பயமுறுத்த அல்ல பண்படுத்த என்று அடிக்கடி சொல்வார். நல்ல கதைகள் உள்ள படம் அமையும்போது இசை அமைப்பார். அந்த வரிசையில் இப்போது இளையராஜா அமைத்துள்ள திகில் படம் மேகா. இந்த படத்திற்கு தொடர்ச்சியாக 12 நாட்கள் பின்னணி இசை அமைத்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படதிற்கு இளையராஜா ''புத்தம் புது காலை பொன்னிற வேளை...'' என்ற பாடலை போட்டிருந்தார். அந்த பாடல் இசை தட்டில் வெளிவந்தது, படத்தில் இடம்பெறவில்லை. தற்போது அந்த பாடலை இந்தப் படத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதை பிரமாண்டமான முறையில் படமாக்கவும் செய்திருக்கிறார்கள்.
மங்காத்தா. இதற்குதானே ஆசைப்பட்டாய் படங்களில் நடித்த அஸ்வின் கதையின் நாயகனாக நடித்துள்ளார். பெங்களூரூ மாடல் அங்கனா ராய் நாயகியாக நடித்துள்ளார், சுப்ரமணியம் சிவாவின் உதவியாளர் கார்த்திக் ரியா இயக்கி உள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் ஆகஸ்டில் வெளிவருகிறது.