Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமௌலி, ராம்கோபால் வர்மா கருத்து மோதல்...!

26 ஜூலை, 2014 - 10:25 IST
எழுத்தின் அளவு:

சமூக வலைத்தளங்கள் தற்போது பல சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டன. முன்பெல்லாம் அவரவர் கருத்துக்களை பதிய வைப்பதற்கு சரியான தளங்கள் இல்லாமல் இருந்தது. பத்திரிகைகள் மட்டுமே திரையுலகப் பிரபலங்களின் கருத்துக்களை வெளியிட்டு வந்தன. தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் பல பிரபலங்கள் அவர்களுக்கென தனி கணக்கை ஆரம்பித்து பல விஷயங்களைப் பற்றி அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால், தேவையற்ற சில மோதல்கள் உருவாகவும் காரணமாக அமைந்து விடுகின்றன.


இப்படித்தான், சமீபத்தில் ராம் கோபால் வர்மா இயக்கி வெளிவந்த தெலுங்குப் படமான 'ஐஸ் க்ரீம்' படத்தைப் பற்றி பிரபல இயக்குனரான 'நான் ஈ' ராஜமௌலி ஒரு கருத்தை டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். “ஐஸ் க்ரீம்' படம் தயாரிப்பு வடிவமைப்புக்கு சிறந்த உதாரணமான படம், ஆனால் உள்ளடக்கத்திற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று கூறியிருந்தார்.


ராஜமௌலியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில தினங்கள் கழித்து ராம்கோபால் வர்மா அவரது கருத்தைப் பதிவு செய்திருந்தார். “ராஜமௌலி, மிகப் பிரம்மாண்மான படங்களைத் தயாரித்து, சிறந்த வெற்றிப் பட இயக்குனர் என பெயரெடுத்தவர். ஆனால், பட்ஜெட் படங்களைத் தயாரித்து திரையுலகத்துக்கு நல்லது செய்ய, அவர் ரொம்ப நாளாக கற்றுக் கொண்டு வருகிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்,” என பதிலடி கொடுத்திருக்கிறார்.


இவர்கள் இரண்டு பேருமே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல விஷயங்களைப் பதிவு செய்து எதையாவது சொல்லி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர்களது கருத்துக்களால் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்த மோதலை தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in