ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால்-லட்சுமிமேனன் நடித்த படம் பாண்டியநாடு. இந்த படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமானின் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய பை பை பை என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதன்பிறகு தான் நாயகியாக நடித்த டமால் டுமீல் படத்தில் தமனின் இசையில் போகாதே போகாதே என்றொரு பாடலை பாடிய ரம்யா அதில் தானே நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அதே தமனின் இசையில், பிரசாந்த் நாயகனாக நடிக்கும் சாகசம் படத்திலும் ஒரு பாடல பாடியிருக்கிறார் ரம்யா நம்பீசன். இந்த பாடலில் பிரசாந்துடன் ஆடப்போவது பாலிவுட் கவர்ச்சி புயல் நர்கிஸ் பக்ரி என்ற நடிகையாம். இவரது ஆட்டம், பாட்டத்தை ஏற்கனவே கண்டு வியந்துள்ள ரம்யா, அவருக்கு பொருத்தமாக அதிரடியாக பாடி அசத்தியிருக்கிறாராம்.
இதுபற்றி ரம்யா நம்பீசன் கூறுகையில், சினிமாவில் நடிப்பதை விட பாடுவதில்தான் எனக்கு எப்போதுமே ஆர்வம் மிகுதி. மலையாளத்தில் நான் 2011ல் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே இவன் மெகரூபன், பேச்சலர் பார்ட்டி, தட்டத்தின் மரியத்து, ஆமென் உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருக்கிறேன். அதேபோல் தெலுங்கிலும் ஒரு படத்தில் பின்னணி பாடியிருக்கிறேன்.
தமிழைப்பொறுத்தவரை முதல் பாடலே ஹிட்டாகி விட்டதால் தற்போது இமான், தமன் போன்ற இசையமைப்பாளர்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் இனிமேல் நடிப்பைப்போலவே பாடுவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறும் ரம்யா நம்பீசன், சாகசம் படத்துக்காக தான் பாடியுள்ள பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.