அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |
சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் இசைவெளியீடு வரும் 22 ஆம் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுவதாக இருந்தது. சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இசைவெளியீடு இங்குதான் நடத்தப்பட்டது. சிங்கம் 2 மிகப்பெரிய வெற்றியடைந்த காரணத்தினால் சென்ட்டிமெண்ட்டாக அதே இடத்தில் அஞ்சான் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த வேண்டும் என்று விரும்பினாராம் சூர்யா. எனவே அவரது விருப்பத்தின்படி வர்த்தக மையத்தை புக் பண்ணி, விழா ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் 22 ஆம் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுவதாக இருந்த அஞ்சான் இசைவெளியீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காரணம்... படத்தில், சூர்யா பாடியிருக்கும் பாடல் பதிவு பணிகள் நிறைவு பெறவில்லையாம், மேலும் விழாவில் கமல் பங்கு பெறுவதாக இருந்த நிலையில், அவர் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருக்கிறதாம், இதனால் படத்தின் ஆடியோவை விழா எதுவும் இன்றி, சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதியன்று நேரடியாக வெளியிட இருக்கிறார்களாம்.