Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!

11 ஜூலை, 2014 - 18:02 IST
எழுத்தின் அளவு:

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் குதிரையில் ஏறி பறந்தவர் சிம்பு. அவர்கள் காதலித்தது என்னவோ குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் உதடு கடித்து எடுத்துக்கொண்ட அசைவ போட்டோக்கள் இப்போதுவரை இணையதளங்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன.


பின்னர் நயன்தாராவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து ஹன்சிகாவை பிக்கப் செய்த சிம்பு, அவருடன் காதல் லூட்டி அடித்த போட்டோக்களையும் அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு மேலும் இணையதள நேயர்களை சூடு காட்டி வந்தார். ஆனால், இப்போது இரண்டாவது காதலும் பேக்கப் ஆனதையடுத்து, முதல் காதலியான நயன்தாராவுடன் மீண்டும் காதல் வளர்த்துக்கொண்டிருக்கிறார்.


அதற்காகவே தனது சொந்த காசில் இது நம்ம ஆளு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு-நயன்தாராவின் காதலை பேஸ் பண்ணியே கதை நகர்த்தப்பட்டுள்ளதாம், அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் சொல்லியிருக்கிறார்களாம். அதனால்தான், அப்படத்தின் டீசரில் உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப்பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார். அதற்கு இதே பதிலை எத்தனை பேர்கிட்டதான்டா சொல்லுவே என்று சூரி ரிப்பீட்டு அடிப்பார். அடுத்து, நயன்தாரா, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கிடையே எதற்காக லவ் பிரேக்அப் ஆனது? என்று கேட்பார். இதற்கு சிம்பு பதில் சொல்ல முடியாமல் தவிக்க, மாட்னான்டா சிலம்பரசன் என்று சூரி கமெண்ட் கொடுப்பார்.


இப்படிதான் இது நம்ம ஆளு படத்தில் ஹ்ன்சிகாவின் காதலை உருட்டி திரட்டி கதை பண்ணியிருக்கிறார்களாம். ஆக தனது சொந்த காதல் கதையை சொந்த காசில் படமெடுக்கிறார் சிம்பு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in