ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா. வேகம் உள்பட சில திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கே.பாலச்சந்தரின் சஹானா என்ற தொலைக்காட்சி தொடருக்கும் இசை அமைத்துள்ளார். இது தவிர வித்யாசகர், ஹாரிஸ் ஜெயராஜ், இளைராஜா உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களிடம் வீணை இசை கலைஞராக பணியாற்றி உள்ளார்.
இவர் பாரம்பரியமிக்க வீணை இசையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியவர். இன்புலிட் மைக்ரோபோன், ரோலண்ட் ஜிடி100 என்ற புராசரஸ் மூலம் வீணை இசையை துல்லியமாக கேட்க செய்து வீணையுடன் மின்சாரத்தை இணைத்தார்.
இதன் காரணமாக இசை கருவிகளை தயார் செய்யும் ரோலண்ட் நிறுவனம் இவரை தனது விளம்பர தூதராக நியமித்திருக்கிறது. புகழ் பெற்ற பெரிய கலைஞர்களே இதுவரை இந்த நிறுவனத்தின் தூதராக இருந்துள்ளனர். இப்போது ராஜேஷ் வைத்தியாவுக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது.
உடனே அவர் உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். ராஜேஷ் வைத்தியா, 2001ம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீதா ஆஸ்தான வித்வான் விருதும், 2011ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.