Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனுக்காக காத்திருக்கும் 'த்ரிஷ்யம்'

11 ஜூலை, 2014 - 10:57 IST
எழுத்தின் அளவு:

ஒரு படம் அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெறுவது சாதாரண விஷயமல்ல. அப்படிப்பட்ட ஒரு படம்தான் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத் திரையுலகில் முதல் முறையாக 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த படம் என்ற பெருமையப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி அறிந்ததும் தமிழ், தெலுங்கு, கன்னடத் திரையுகைச் சேர்ந்தவர்கள் உடனே ரீமேக் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.


அதில் முதலில் முந்திக் கொண்டது கன்னடத் திரையுலகினர். பி.வாசு இயக்கத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிக்க கடந்த மாதம் கன்னடத்தில் வெளிவந்த இந்தப் படம் ரவிச்சந்திரனுக்கு நீ....ண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்க வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் நடிக்கத் தயாராகி இன்று வெளிவர உள்ளது. படத்தைப் பார்த்த தெலுங்குத் திரையினர் வெளியீட்டுக்கு முன்பே படத்தைப் பற்றி ஆஹா..ஓஹோவென பேச ஆரம்பித்து விட்டனர். கண்டிப்பாக தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்கிறார்கள்.


ஆனால், தமிழில் மட்டும் 'த்ரிஷ்யம்' படம் ரீமேக்காக நடிகர் கமல்ஹாசனுக்காக காத்திருக்கிறது. அவர் நடிக்கிறார், மலையாளப் படத்தை இயக்கி ஜீது ஜோசப்பே தமிழ்ப் படத்தையும் இயக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கப் போய்விட்டார். மூன்று மொழிகளில் பேசப்பட்ட, பேசப்படும் படமாகிவிட்ட 'த்ரிஷ்யம்' தமிழில் மட்டும் கமல்ஹாசனுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ், ஆகியோர் பெற்ற பெயரைக் காட்டிலும் கமல்ஹசான் நிச்சயம் சிறப்பாக நடிப்பார் என படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே சிலர் விமர்சனத்தை ஆரம்பித்து விட்டார்கள்.


'த்ரிஷ்யம்' என்றால் பார்வை. தமிழ்ல சீக்கிரம் படத்தை எடுத்து பார்க்க வையுங்கப்பா...


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in