ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
12பி படத்தில் அறிமுகமானவர் ஷாம். அதையடுத்து, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, ஏபிசிடி, தூண்டில், 6 என பல படங்களில் நடித்தார். இதில் 6 என்ற படத்தை தானே தயாரித்து பல கெட்டப்புகளில் நடித்தார். ஆனால் படம் பேசப்பட்ட அளவுக்கு வசூல் தரவில்லை. அதனால் அந்த படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து பல படங்களை தயாரிக்க கதை கேட்டு வைத்திருந்த ஷாம், தொடர்ந்து ரிஸ்க் எடுக்க முடியாது என்று சொந்த பட முயற்சியை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், தற்போது எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் ஆர்யா-விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த மல்டி ஹீரோ படம் தனக்கு கைகொடுக்கும் என்று நினைக்கும் ஷாமுக்கு காமெடியான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் மனதளவில உள்ளதாம். ஆனால், அவருக்கு காமெடி பெரிதாக வராதாம். இருப்பினும் முயற்சி செய்யப்போகிறேன் என்கிறார்.
மேலும், தற்போதைய காமெடியன்கள் நடித்த காமெடி காட்சிகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் ரசிப்பாராம். அந்த வகையில், பவர்ஸ்டார் சீனிவாசனின் காமெடி அவருக்கு ரொம்ப பிடித்துள்ளதாம். அதாவது ஒரு காமெடியன் காமெடி செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பதை விட, அவனை ஸ்கிரீனில் பார்த்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வர வேண்டும். அந்த சிரிப்பு பவர்ஸ்டாரை பார்த்தாலே வருகிறது. அதுதான் அவரது வெற்றி. அவரை எந்த கோணத்தில் பார்த்தாலும் எனக்கு சிரிப்பு வரும். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன் என்று சொல்லும் ஷாம், நான் பவர்ஸ்டாரின் தீவிர ரசிகனாகி விட்டேன் என்று உரக்க சொல்கிறார்.