ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சான் படத்தின் டீஸர் இரண்டு நாட்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையார்கள் பார்த்தனர் என்பதற்காக ஒரு கொண்டாட்டத்தை நேற்று 'அஞ்சான்' படக்குழுவினர் அரங்கேற்றியிருக்கிறார்கள். உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு விழா நடைபெறுவது இதுதான் முதன் முறையாக இருந்திருக்கும். சமீப காலமாக 'யு டியூப்'பில் ரசிகர்கள் ரசிப்பதையே மிகப் பெரிய செய்தியாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதே சமயம் ஒரு படத்தின் ஒரு டீஸரையோ, டிரைலரையோ யு டியூப்பில் அதிக ரசிகர்கள் பார்ப்பதற்கும், அந்த படத்தின் வெற்றிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள் என்று சொல்லப்படும் 'கோலி சோடா' படத்தின் முதல் டிரைலரைப் பார்த்தவர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டும்தான். இப்படத்தின் இரண்டாவது டிரைலரைப் பார்த்தவர்கள், அதாவது படம் வெளிவருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட டிரைலரைப் பார்த்தவர்கள் வெறும் 32,000 பேர் மட்டுமே. அடுத்து நன்றாக ஓடுவதாக சொல்லப்படும் 'மஞ்சப் பை' படத்தின் டிரைலரை வெறும் 1,80,000 பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் வாங்கி வெளியிட்டதும், தற்போது 'அஞ்சான்' டீஸருக்காக விழா எடுத்திருப்பதும் ஒரே தயாரிப்பு நிறுவனம் என்பதுதான் முக்கியமான விஷயம்.
இதற்கெல்லாமா விழா எடுப்பது என திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் நேற்றே கிண்டலாக பேச ஆரம்பித்து விட்டார்களாம். ஒரு படத்தின் வெற்றி அதன் டிரைலரில் கூட இல்லை என்பதை 'கோலி சோடா, மஞ்சப் பை' ஆகிய படங்கள் சமீபத்தில்தான் நிரூபித்திருக்கின்றன. அப்படியென்றால் எதற்கு 'அஞ்சான்' டீஸருக்காக ஒரு விழா என்கிறறீர்களா ? அந்தப் படத்தை இணைந்து தயாரிக்கும் மற்றொரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்தான் இப்படி விழா எடுக்க வேண்டும் என்றாராம். அவரை ஒரு விளம்பரப் பிரியர் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
'அஞ்சான்' ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சிடோய்...!