ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முத்தம் என்பது அன்பின் அடையாளமாக இருந்தது. அதை காமத்தின் அடையாளமாக மாற்றியதில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த முத்தத்தை இப்போது விலை வைத்து விற்கும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதும் சினிமாதான். தமிழ் சினிமா ரசிகனுக்கு முத்தத்தை அறிமுகப்படுத்தியது உலக நாயகன் கமல்ஹாசன். அதுவரைக்கும் அவனுக்கு உதட்டுடன் உதடு பதிக்கும் லிப் லாக் முத்தம் பற்றி அதிக அறிமுகம் கிடையாது. அரிதாக வரும் ஹாலிவுட் படங்களில் பார்த்தால்தான் உண்டு. முத்தக் காட்சிகளுக்காகவே ஓடிய ஹாலிவுட் படங்கள்கூட உண்டு.
புன்னகை மன்னன் படத்தில் கமல் ரேகாவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார். அப்புறம் தேவர் மகன், குருதிப்புனலில் கவுதமிக்கு, மகாநதியில் சுகன்யாவுக்கு என கமலின் முத்தம் தொடர்கதையானது. அதன் பிறகு மெல்ல மெல்ல மற்ற ஹீரோ, ஹீரோயின்களுக்கும் பரவ ஆரம்பித்தது. கமல் திரையில் கொடுத்த முத்தத்தை சிலர் திரைக்கு வெளியே கொடுக்க ஆரம்பித்தார்கள்.
வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதட்டை இழுத்து வைத்து கடித்து ஆள்உயர போஸ்டராக ஒட்டினார் சிம்பு. இருவரும் காதலித்து பிரிந்த பிறகு இருவரும் தனி அறையில் முத்தமிட்ட காட்சி இணைய தளங்களில் இப்போதும் இருக்கிறது (அதை எடுத்தது யார் என்கிற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது). பாடகர் அனிருத் தன்னைவிட 10 வயது மூத்த ஆண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்த காட்சியும் இணையதளத்தில் வெளியானது. இப்படி இன்றுள்ள இளம் நட்சத்திரங்கள் சினிமாவுக்கு வெளியேயும் முத்த மழை பெய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது படத்தில் லிப் லாக் முத்தக்காட்சி வைப்பது பரபரப்பான விளம்பரத்துக்கு பயன்படுவதால் சாதாரண சிறு பட்ஜெட் படங்களில்கூட முத்தக்காட்சியை வைக்கிறார்கள். சினிமாவுக்கு வருகிற புதுமுகங்கள் வேறு வழியின்றி பிடிக்கிறதோ இல்லையே முத்தக் காட்சிகளில் நடித்து தொலைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் "எங்கள் படத்தில் பத்து முத்தக்காட்சி இருக்கிறது" என்று பெருமையாக சொல்லவும் கூடும்.
நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷால், லட்சுமிமேனன் முத்தக் காட்சி இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து மஞ்சப்பை படத்தில் லட்சுமிமேனன் விமலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார். இடையில் தேசிங்கு ராஜா படத்தில் விமல் பிந்து மாதவிக்கு கொடுத்த முத்தம் சத்தமில்லாமல் போய் விட்டது. நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை படங்களுக்கு பிறகு லட்சுமிமேனனுக்கு நிறைய முத்த ஆஃபர்கள் குவிந்ததால் அதை தவிர்க்க முத்தக்காட்சி இருந்தால் கூடுதலாக சில லட்சம் சம்பளம் என்று கேட்டதாக தகவல் வெளியானது. அதையும் கொடுத்து சில படங்கள் புக் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழைப்போலவே இந்தியில் இந்த கலாச்சாராம் வந்து விட்டது. புதுமுக நடிகை ஆலியாபட் முத்தக்காட்சிகளுக்கு தனி சம்பளம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு முத்தத்திற்கு ஒரு கோடியாம். அதேபோல சன்னி லியோனும் எவ்வளவு முத்தமோ அவ்வளவு சம்பளம் என்ற பாலிசியை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகைகள்கூட முத்தக் காட்சியில் நடிக்க தயாராக இருப்பதாகவும் அதற்கு தனி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா ஆர்வத்தால் புதிதாக அறிமுகமாகும் நடிகைகளிடம் எங்கள் படத்தில் இத்தனை முத்தக் காட்சிகள் இருக்கிறது அதற்கு சம்மதம் என்றால் வாய்ப்பு தருகிறோம் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. தமிழ் சினிமா ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த முத்த விற்பனையின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. தணிக்கை குழுவினர் முத்தக் காட்சிக்கு கத்தரி போட்டு வந்தார்கள். தணிக்கை விதியில் முத்தக் காட்சி தொடர்பாக பெரிய திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. அப்படி இருந்தும் தணிக்கை குழு எப்படி அனுமதிக்கிறது என்றும் தெரியவில்லை.