ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் நடிகர் டிங்கு தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு டிங்கு டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளியை நடத்துகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் அமெரிக்காவில் மூன்று நகரங்களில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார். அட்லாண்டாவில் வருகிற 11ந் தேதியும், சான் ஜோஸ் நகரில் 13ந் தேதியும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 20ந் தேதியும் நடக்கிறது.
இதில் நமீதா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். ரோபோ சங்கர் உள்ளிட்ட மிமிக்ரி கலைஞர்கள், ரெனைனா ரெட்டி, கணேஷ், அனிஷ் ரெஹான், சண்டி, பிரசாந்த் உள்ளிட்ட பாடகர் பாடகிகள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டனர். டி.டி தனது புது கணவருடன் பறந்திருக்கிறார். நிகழ்ச்சியின் இடைவெளியில் அங்கேயே தேனிலவையும் கொண்டாடுகிறார்.