நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் சென்னையிலுள்ள இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த நிலையில், ரஜினி-கமல் நடித்த 16 வயதினிலே படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கண்ணு களமிறங்கினார். அதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், படத்தை வெளியிட தயாரானபோது, அப்படத்தின் சார்ட்டிலைட் உரிமத்தை வைத்திருக்கும் ஒரு சேனல், இவர்கள் படத்தை வெளியிடும்போது தாங்களும் 16 வயதினிலே படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருப்பது ராஜ்கண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்படி செய்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே என்று படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் செய்திருக்கிறார்.
இதன்காரணமாக, அப்படத்தை தானே தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதாக கூறியிருந்த ஒரு பிரபல தயாரிப்பாளர், அந்த சேனல் 16 வயதினிலே படத்தை வெளியிட தயாராகி விட்டதை அறிந்து, பின் வாங்கி விட்டாராம். அதனால்தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்காக பல லட்சங்களை செலவு செய்து விட்டு, போட்ட காசை எப்படி எடுப்பது என்று தற்போது தடுமாறிக்கொண்டு நிற்கிறார் ராஜ்கண்ணு. அதையடுத்து, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட சேனலிடம் நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.