Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த மாதம் எக்கச்சக்க படங்கள் வெளியீடு!

04 ஜூலை, 2014 - 15:46 IST
எழுத்தின் அளவு:

படங்கள் ஓடுகிறதோ இல்லையோ மாதந்தோறும் டஜன் கணக்கில் படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் முடிய 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒரு சில படங்களே வெற்றி. மற்றவை தோல்விப்படங்கள். ஆனாலும் நாளுக்கு நாள் தயாராகும் படங்களின் எண்ணிக்கையும், வாரம் வாரம் வெளியாகிக் கொண்டிருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.


இந்த மாதம் சுமார் 15 படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் விக்ரம் பிரபு நடித்துள்ள அரிமா நம்பி இன்று (ஜூலை 4-ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது. ஞான ராஜசேகரன் இயக்கியுள்ள ராமானுஜன், லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நளனும் நந்தினியும் ஆகிய படங்கள் 11-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.


தனுஷ் தயாரித்து, நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவியின் பூலோகம் ஆகிய படங்கள் 18-ஆம் தேதி வெளியாகின்றன. இந்தப் படங்கள் தவிர கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ், கரண் ஹீரோவாக நடித்துள்ள சூரன், ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள நம்பியார், விஜய் ஆன்டனி நடித்துள்ள சலீம், சித்தார்த் ஹீரோவாக நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா, நட்ராஜ் நடித்துள்ள சதுரங்க வேட்டை, நவீன் சந்திரா நடித்துள்ள சரபம், கஞ்சா கருப்பு தயாரித்து நடித்துள்ள வேல்முருகன் போர்வெல் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்திருக்கும் பப்பாளி ஆகிய படங்களும் இந்த மாதம் வெளிவர தயார்நிலையில் உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இவை தவிர சுமார் அரைடஜன் சிறு முதலீட்டு படங்களும் இம்மாதம் வெளிவரத் தயாராக இருக்கின்றனவாம். மொத்தத்தில் 15க்கும் மேற்பட்ட படங்கள் இம்மாதம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகின்றன. எத்தனை படங்கள் வெளியானால் என்ன? வெளியாகும் படங்கள் வெற்றிபெற்றால் மட்டுமே சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in