ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு திரையுலகங்களுக்கு இணையாக மலையாள சினிமாவும் வளர்ந்து விட்டது. எண்ணிக்கையில் அது அதிகமானாலும் தரத்தைப் பொறுத்தவரையில் மலையாள சினிமா தமிழ், தெலுங்கை விட முன்னணியில்தான் இருக்கிறது. மலையாளத் திரையுலகம் மட்டும் எப்போதும் நட்சத்திரங்களின் பின்னால் செல்வதே இல்லை. முன்னணி ஹீரோக்கள் கூட எப்படிப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடிப்பார்கள். திருமணமானால் ஹீரோயின்களை ஒதுக்கி விடுவதில்லை. அதன் பின்னும் அவர்கள் ஹீரோயின்களாகவே நடிப்பார்கள். இந்த அரையாண்டில் மலையாளத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 80 படங்கள் வெளிவந்துள்ளன.
மலையாளத் திரையுலகிலும் இந்த ஆண்டில் அதிக வெற்றியைப் பெற்றவர்கள் இளைஞர்களே. கடந்த ஆண்டு இறுதியில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'த்ரிஷ்யம்' படம் இந்த ஆண்டு மே மாதம் வரை உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து கொடுத்ததோடு, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. மம்முட்டி நடித்த “பால்யகாலசகி, பிரைஸ் த லார்ட், கேங்ஸ்டர்” ஆகிய படங்கள் தோல்வியையே தழுவின. மோகன்லால் நடித்து வெளிவந்த 'கூதாரா' மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த அரையாண்டில் “1983, ஓம் சாந்தி ஓஷானா, 7த் டே, ஹெவ் ஓல்ட் ஆர் யு, பெங்களூர் டேய்ஸ்”, ஆகிய ஆறு படங்களே வெற்றி பெற்றுள்ளன. இதில் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் வெற்றி மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இளம் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடித்து ஒரு புதிய பாதையை மலையாளத்தில் ஏற்படுத்தி விட்டனர். அதே போல் தமிழிலும், தெலுங்கிலும் 'மல்டி ஸ்டார்' படங்கள் வர ஆரம்பித்தால்தான் துவண்டு கிடக்கும் அந்தத் திரையுலகங்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.