ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கிரணா பாண்டியனுக்கும், மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் எஸ்.ஹரிகரன் மகன் ரவி சங்கரனுக்கும் நேற்று (ஜூன் 25) சென்னை ஏவிஎம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தபோது காதல் ஏற்பட்டது. காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருமணம் இனிதே நடந்தது.
திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள. ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், சம்பத், செந்தில் பாலாஜி, செந்தூர் பாண்டியன், வைத்தியலிங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், சேம்பர் முன்னாள் தலைவர் கல்யாண். நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், நடிகர்கள், ராம்கி, கருணாஸ், எஸ்.ஜே.சூர்யா, ஆனந்தராஜ், பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணவீட்டிற்கு வந்திருந்தவர்களை அருண்பாண்டியன், அவரது மனைவி விஜயா அருண் பாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.