ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தம்பி கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அண்ணன் சூர்யா திடீர் விசிட்டிங் வி.ஐ.பியாக கலந்து கொண்டார். விழாவில் சூர்யா பேசியதாவது: அஞ்சான் சூட்டிங் முடிந்து இப்போதான் திரும்பினேன். மெட்ராஸ் டிரைலர் பார்த்தேன் மிரட்டலா இருந்திச்சு. நமக்கு போட்டியா நிறைய பேர் வர்ற மாதிரி தெரியுது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். கார்த்திக்கிற்கு பருத்தி வீரன் படத்துக்கு பிறகு இது முக்கியமான படமாக இருக்கும். சில படங்கள் கார்த்திக்கு சில அனுபங்வளை கொடுத்துச்சு. கொஞ்சம் அவன் மாறிக் கொள்ள வேண்டியது இருந்தது. அதற்கான சரியான படமா இது அமைஞ்சிருக்கு.
பொதுவாக நாம ஒரு ரூட்டில் போயிட்டிருப்போம். திடீர்னு போரடிக்க ஆரம்பிச்சா நம்மை மாத்திக்கணும் அது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனா தைரியமா மாறித்தான் ஆகணும். காக்க காக்க முடிச்சிட்டு அடுத்து அதுக்கு சம்பந்தமே இல்லாத பிதாமகன்ல நடிச்சேன். இன்னொரு டைமன்சன பாலா காட்டினார். இந்த மாற்றங்கள் எல்லா ஹீரோவுக்கும் அவசியம். அப்படி மாறிக்கிட்டாதான் நிலைச்சு நிற்க முடியும். கார்த்திக்கின் இந்த மாற்றமும் வெற்றிகரகமாக அமையும். அதுக்கான சாட்சி இந்த டிரைய்லர்ல இருக்கு. என்றார்.