ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அஞ்சான்' படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். சூர்யா - சமந்தா என புது ஜோடியுடன், முற்றிலும் இளமையுடன் படத்தை எடுத்திருப்பதால் இளைஞர்களை இந்தப் படம் அதிகமாகவே கவரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம். செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சுமார் 70 கோடி வரை படத்திற்கு செலவு செய்திருக்கிறார்களாம். படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். தெலுங்கிலும் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
கண்டிப்பான வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் சூர்யா இந்த படத்தை மிகவும் நம்புகிறாராம். அதனால்தான் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். அதோடு அவருக்கும் சமந்தாவுக்குமான 'கெமிஸ்ட்ரி' நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம். தமிழில் நம்பர்-1 அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதற்காக சமந்தா மிகவும் தாராளமாக நடித்திருக்கிறாராம். லிங்குசாமி கடைசியாக இயக்கிய 'வேட்டை' படம் சுமாராகத்தான் ஓடியது. அந்தப் படம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த படத்தின் வெற்றிதான் ஒரு இயக்குனராக தன்னை நிலை நிறுத்தும் என லிங்குசாமி நினைக்கிறாராம்.
முற்றிலும் மும்பையில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதை. அஜித், விஜய் இருவரும் தற்போதுதான் மும்பை தாதாக்களை அழித்தார்கள். இப்போது சூர்யா அவர்களை எதிர்த்து அழிக்கப் போகிறாராம். சமீபத்திய மும்பை சென்டிமென்ட்டில் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். விரைவில் படத்தின் இசையை பிரம்மமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியாக உள்ளது.