ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான 'த்ரிஷ்யம்', கன்னடத்தில் 'த்ரிஷ்யா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. அனைத்து ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக சேன்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நம்ம ஊரு பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் மற்றும் பலர் நடிப்பில் இந்தப் படம் உருவாகியது. இளையராஜாவின் பின்னணி இசையும், பி.வாசுவின் இயக்கமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாம். கன்னடத்தில் பி.வாசு புகழ் பெற்ற இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் அனைத்து சென்டர்களிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுவதாகச் சொல்கிறார்கள். ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்றும், ஒரு இடைவெளிக்குப் பிறகு அவருக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைத்தேடிக் கொடுத்திருக்கிறது என்றும் கன்னடத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க ஸ்ரீப்ரியா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் தெலுங்கிலும் நல்ல வெற்றியைப் பெறும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனராம். தமிழில், கமல்ஹாசன் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற விவரங்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்காமலே உள்ளது.