மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
புதுமுகங்கள் இணைந்து கள்ளப்படம் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார்கள். இதனை ஜே.வடிவேல் இயக்கி நடிக்கிறார். லட்சுமிபிரியா ஹிரோயின். அழிந்து வரும் தமிழ் கலைகளை காப்பாற்ற இளைஞர்கள் இணைந்து அதனை ஒரு திரைப்படமாக எடுக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சிக்கு வரும் இடையூறுகளும். அதனை இளைஞர்கள் வெல்வதும்தான் கதை. இந்த படத்தின் இசை அமைப்பாளர் கே..
இந்த படம் சினிமாவை பற்றிய படம் என்பதால் ஏதாவது ஒரு புதுமை செய்யலாம் என்று நினைத்து இசை அமைப்பாளர் கே வும், இயக்குனர் வடிவேலுவும், தயாரிப்பாளர் பொன்னிறைவனும் இணைந்து பாடலுக்குள் பாடல் வைப்பது என்று தீர்மானித்தார்கள். சினிமா பற்றி வரும் அந்த பாடலுக்குள் நடிக்க கற்றுத் தரும் பிரபல அமைப்பான கூத்துப்பட்டறை பாடலை வைத்திருக்கிறார்கள்.
இசை அமைப்பாளர் கே. மற்றும் கிராரிஸ்ட் விக்ரம் ஆகியோர் சினிமாவை பற்றிய பாடல்களை பாட அதற்குள் வரும் கூத்துப்பட்டறை பற்றிய பாடலை கிருஷ்ணகிரி கூத்துப்பட்டறை குழுவினர் பாடி உள்ளனர். இந்த புதுமையான முயற்சிக்க நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக் குழுவினர் நம்புகிறார்கள்.