சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் |
தமிழ் நடிகர்களில் ரஜினிக்குத்தான் ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த முத்து படம் ஜப்பானில் வெளியானபோது அங்குள்ள ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்களாம். அதிலிருந்து அங்கு ரஜினிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதனால் அதையடுத்து தான் நடித்த ஒவ்வொரு படங்களையும் ஜப்பானில் முக்கிய திரையரங்குகளில் திரையிடுவதில் தனி ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.
அவரைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் ஜப்பானில் வெளியாகும் விஜய் படங்கள் சமீபகாலமாக நல்ல வசூலை குவித்து வருகிறது. அதோடு விஜய் படங்கள் வெளியாகும் நாளில், தமிழகத்தில் இருப்பது போன்று அங்குள்ள சில தியேட்டர்களிலும் நல்லதொரு ஓப்பனிங்கும் இருந்து வருகிறதாம்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடுவது போன்று நேற்று 40 வது பிறந்த நாளை ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்களாம். அதோடு விஜய்க்கு ஏராளமானோர் போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம். ஆக, விஜய்யின் புகழ் கடல் கடந்தும் பரவிக்கொண்டிருக்கிறது.