ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து தனது கட்சிக்கு என தனியாக டிவி சேனல் வேண்டும் என விரும்பிய விஜயகாந்த கேப்டன் டி.வி.,யை தொடங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக கேப்டன் டி.வி.,யின் சோதனை ஓட்டம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14ம்தேதி முதல் கேப்டன் டி.வி., ஒளிபரப்பு தொடங்கவுள்ளது. முதல் நாள் ஒளிபரப்ப வேண்டி நிகழ்ச்சிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. முதல் நாளில் விஜயகாந்தின் ஹிட் லிஸ்ட்டில் முக்கியமான ரமணா படத்தையும், கேப்டன் பிரபாகரன் படத்தையும் ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னதாக தன் இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்திய வல்லரசு படமும், தேமுதிகவின் முதல் மதுரை மாநாடு நிகழ்ச்சியும் இடம் பிடிக்கும் என்று கேப்டன் டி.வி., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.