Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

22 ஜூன், 2014 - 22:54 IST
எழுத்தின் அளவு:

உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் என்ற பெருமையுடைய ராம நாராயணன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த ராம நாராயணன், சென்னையில் வெகுநாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கொஞ்ச காலம் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூன் 22ம் தேதி) இரவு 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர் ராம நாராயணன். சினிமா மீது கொண்ட மோகத்தால் சென்னைக்கு வந்த ராமநாரயணன், தான் ஒரு சிறந்த பாடலாசிரியராக வர வேண்டும் என்று தான் வந்தார், ஆனால் அவரது பாதை கதை மற்றும் வசனம் பக்கம் திரும்பிவிட்டது. தனது நண்பர் கஜாவுடன் சேர்ந்து கதை, வசனங்களை எழுதி வந்தவர், முதன்முதலாக ஆசை அறுபது நாள் என்ற படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பின்னர் மீனாட்சி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தொடர்ந்து பல படங்களை இயக்கி 1980-90-களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 126 படங்கள் இயக்கி, உலகளவில் அதிக படங்களை இயக்கிய இயக்குநர் என்ற சாதனையும் படைத்துள்ளார். கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கினார்.

பொதுவாக ராம நாராயணன் படங்கள் என்றாலே கிராபிக்ஸிற்கு பஞ்சம் இருக்காது, அதிலும் விலங்குகளை வைத்து படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர். துர்கா, தேவர் வீட்டு பொண்ணு போன்ற இவரது படங்கள் அதற்கு சான்று, அதுமட்டுமின்றி ஆன்மிகம் தொடர்பாக ஏராளமான சாமி படங்களை இயக்கியுள்ளார். ஈஸ்வரி, ஆடி விரதம், சிவசங்கரி, சிவராத்திரி, மாயா, ராஜகாளியம்மன், பாளையத்து அம்மன், கோட்டை மாரியம்மன் என பல படங்களை சொல்லலாம்.

இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் ராம நாராயணன். திமுக., தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், 1989-ம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் எம்.எல்.ஏ.-வாகவும் இருந்துள்ளார். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். திரையுலகில் இவரது சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மறைந்த ராம நாராயணனின் உடல் சிங்கப்பூரில் இருந்து நாளை மதியம் 1.30 மணியளவில் சென்னை கொண்டு வரப்பட இருக்கிறது. பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு ஜூன் 24ம் தேதி செவ்வாய் கிழமை அன்று நடைபெற இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in