ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. தற்போது உலகம் முழுவதும் சென்று நகைச்சுவை நிகழச்சிகள் நடத்தி வருகிறாப. பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் இருக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும பங்கேற்று வருகிறார்.
அகிலன், மதுரை வீரன் படங்களில் நடித்தார். இப்போது டி.ராஜேந்தர் இயக்கும் ஒரு தலை காதல் படத்தில் முழுநீள சோலோ காமெடியனாக நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இரண்டு வார நிகழ்ச்சிக்காகத்தான் தொலைக்காட்சிக்கு வந்தேன். நான் அடைந்திருக்கும் உயரம் நான் எதிர்பாராத ஒன்று. உலகம் முழுவதும் 40 நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் அவர்கள் சொல்வது நீங்கள் சினிமாவில் நடியுங்கள் என்றுதான். அகிலன், மதுரை வீரன் படங்களில் நடித்தேன். என்றாலும் அந்த படங்கள் எனக்கு சினிமாவில் சரியான அடையாளத்தை தரவில்லை. இப்போது ஒரு தலை காதல், நதிகள் நனைவதில்லை படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் சினிமாவில் எனக்கு அடையாளத்தை தரும் என்று நம்புகிறேன். என்றார்.