ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹாலிவுட் சினிமாவில் சில ஆண்டுகளாக நிர்வாண ஆதிக்கம் செலுத்தி வந்தவர் சன்னி லியோன். இதனால் உலகம் முழுக்க அவரது புகழ் பரவிக்கிடந்தது. கூடவே இளவட்ட ரசிகர்களின் நுனி நாக்குகளில் சன்னியின் பெயர் ஒட்டிக்கிடந்தது.
ஆனால், பின்னர் ஹாலிவுட்டில் இருந்து இடம்பெயர்ந்து பாலிவுட்டுக்கு வந்த சன்னி, கவர்ச்சி நடிகையானார். அதேசமயம் அவ்வப்போது ஓரிரு படங்களில நிர்வாண காட்சிகளிலும்கூட நடித்தார். பரத் இந்தியில் நடித்த ஜாக்பாட் படத்தில்கூட ஒரு நிர்வாண காட்சியில் நடித்து அவரை கலங்கடித்தார் சன்னி.
இப்படி சில ஆண்டுகளாக வடஇந்திய ரசிகர்களை புரட்டி எடுத்து வந்த சன்னிலியோன், தற்போது வெளியாகியுள்ள வடகறி மூலம் கோலிவுட் ரசிகர்களையும் துவம்சம் செய்ய வந்திருக்கிறார். அதோடு, தமிழில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது கமிட்டாகியிருக்கிறார்.
அப்படத்தில் ஜெகபதிபாபு, ராகுல் ப்ரீத்சிங் ஜோடி சேர்ந்திருப்பதால், சன்னிக்கு தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தை கொடுத்திருக்கிறார்களாம். ஆனால், சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லாமல் பாதி படத்துக்கு மேல் வருவது போன்று அவரது காட்சிகளை அதிகப்படுத்தியிருப்பதோடு ஒரு குத்துப்பாட்டும் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தமிழில் ஆடியதுபோல் உடம்பை கவர் பண்ணி ஆடாமல், பாலிவுட்டில் ரவுண்டு கட்டியதுபோன்று செமத்தியான குத்தாட்டம் போட்டு ஆந்திராவை கலக்கி எடுக்கப்போகிறாராம் சன்னி லியோன்.