ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமன்னா நடித்துள்ள இரண்டாவது இந்திப் படம் 'ஹம்சகல்ஸ்'. இந்த படத்தில் தமன்னா, பிபாஷா பாசு, இஷா ஆகிய மூவர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கான எந்த விதமான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிபாஷா பாசு கலந்து கொள்ளவில்லை. தமன்னாவை அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் இயக்குனர் சஜித் கான் முன்னிலைப்படுத்துவதாக ஏற்கெனவே ஒரு பேச்சு இருந்தது. அதனால்தான், பிபாஷா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் என்றும் சொன்னார்கள். இதனிடையே இது பற்றி தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் பிபாஷா.
“இத்துடன் 'ஹம்சகல்ஸ்' படத்திற்கான பிரமோஷன்களில் நான் ஏன் வருவதில்லை என்ற காரணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என நினைக்கிறேன். நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு சம்மதிக்கிறோம். ஆனால், இந்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்தவுடன் நான் மிகவும் வேதனை அடைந்தேன். அதன் பின், அந்த படத்தைப் பற்றி நேர்மையாக என்னால் எப்படி பேச முடியும். அதனால், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து நானாக விலகிக் கொண்டேன். இருந்தாலும், இந்த படம் அனைவரையும் கண்டிப்பாக ரசிக்க வைக்கும். என்னுடன் நடித்த சைப், ரிதேஷ், தமன்னா, இஷா, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
சில நேரங்களில் சில பயணங்கள் முழுமையாக நிறைவடைவதில்லை. அதில் இதுவும் ஒன்று. அதற்காக நான் யாரையும் குற்றம் சொல்லவும் விரும்பவில்லை. சில கூட்டணி என்னுடைய பயணத்தை தொந்தரவு செய்து விட்டது, ” என்று சிலரை குற்றம் சாட்டியிருக்கிறார். அந்த கூட்டணி யார் என்பது அவருக்கே வெளிச்சம்…