வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
தி.மு.க.விலிருந்து விலகுவதாக குஷ்பூ அறிவித்த பிறகு பரபரப்பு செய்திகளில் இடம் பிடித்துவிட்டார் குஷ்பூ. எந்த பத்திரியைப் புரட்டினாலும் குஷ்பூ பற்றிய செய்திதான். அதைவிட டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் குஷ்பூ பற்றிய செய்திகளை நிறைந்திருக்கின்றன. அவற்றில் அவரை விமர்சிக்கும் கருத்துக்களே அதிகம் பகிரப்படுகின்றன. இந்த தகவல்கள் குஷ்பூவை கடுமையாய் பாதித்துள்ளன. சினிமாவிலும் நடிக்கவில்லை, சின்னத்திரையிலம் பிஸி நடிகை இல்லை, அரசியலிலும் தற்போது இல்லை. எனவே ப்ரீயாக இருக்கும் குஷ்பூ, எந்நேரமும் ஆன்லைனிலேயே இருக்கிறார். தன்னைப் பற்றிய கருத்துக்களை படிக்கிறார். அப்படி படிக்கும்போது அவரைப் பற்றிய எதிர்மறை கருத்துகள் குஷ்பூவை கடுமையாய் பாதிக்கச் செய்கின்றன. தன்னைப் பற்றிய ஒவ்வொரு கருத்துக்கும் உடனடியாய் மறுப்பு தெரிவித்து தன் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார். குறிப்பாக டுவிட்டரில் நிமிஷத்துக்கு ஒரு மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் மேடம்...!