ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் தமிழில் வெளியாகும் அதே நாளில் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருந்தது. அந்த திட்டத்தில்தான் தமிழில் டப்பிங் பணிகள் நடைபெற்றபோதே தெலுங்குப் பதிப்புக்கான பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்றன. ஆனால் திட்டமிட்டபடி நான் சிகப்பு மனிதன் படம் தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு படத்தை தெலுங்கில் வெளியிட முடியவில்லை.
இது பற்றி அப்போது விஷாலிடம் கேட்டபோது, இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன அதனால்தான் ரிலீஸ் பண்ணவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் இந்துருடுவை ரிலீஸ் செய்வோம் என்று கூறினார். ஆனால் நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே இந்துருடுவை வாங்க யாரும் முன் வரவில்லை. எனவே அப்படத்தை ரிலீஸ் செய்ய விஷால் பல வழிகளில் முயற்சிகளை தொடர்ந்தார்.
இந்நிலையில் நாளை இந்துருடு ஆந்திராவில் வெளியாகிறது. தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களில் மொத்தமாக 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது இந்துருடு.