14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நெடுஞ்சாலை படத்தில் மலையாள மங்காத்தாவாக வந்து அசத்தியவர் ஷிவதா. இரண்டு வருடங்களாக இந்தப் படத்தில் நடித்தவர் முடியும் வரை வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் அதே மலையாள பெண் கேரக்டர், பாவாடை சட்டை காஸ்ட்யூம் என வந்ததால் நடிக்காமல் வாய்ப்புகளை தவிர்த்துக் கொண்டே வந்தார். இப்போது இயக்குனர் பரத்பாலாவின் உதவியாளர் அருண்குமார் இயக்கும் ஜீரோ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதில் ஷிவதாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அஸ்வின். மங்காத்தா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்த அஸ்வின் சோலோ ஹீரோவாக நடிக்கும் முதல் படம்.
"நெடுஞ்சாலை படத்துக்கு பிறகு அதே மாதிரியான கேரக்டர்களோடு நான்கு படங்கள் வந்தது அவற்றில் நடிக்கவில்லை. ஜீரோ அருமையான கதை. நெடுஞ்சாலை ஷிவதாவா இது என்று ஆச்சர்யப்பட வைக்கும் கேரக்டர். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறேன். அதனை அந்த தயாரிப்பு நிறுவனங்களே அறிவிக்கும்" என்கிறார் ஷிவதா.