மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் தனுஷ், தனது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, நடிக்கும் படம் ''வேலையில்லா பட்டதாரி (விஐபி)''. அமாலாபால் ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். இந்தப் படம் அடுத்த மாதம் (ஜூலை) வெளிவருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பத்திரிகைகளில் விளம்பரமும் வெளியிடப்பட்டது.
இதில் தனுஷ் சிகரெட் பிடிப்பது மாதிரியான படம் இடம் பெற்றிருந்தது. சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சி வந்தால் "சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என்ற வாசகம் இடம்பெற வேண்டும். விளம்பரங்களில் சிகரெட் பிடிக்கும், மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது.
அதோடு இந்த விளம்பரங்களுக்கு சில சமூக நல அமைப்புகள், சுகாதார அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுவாக வேலை இல்லாமல் இருக்கிறவர்கள்தான் விரக்தியில் சிகரெட் குடிக்கிறார்கள். அதனை ஊக்குவிப்பதுபோல இது இருப்பதாக சொன்னார்கள். இதையடுத்து தனுஷ் இந்த விளம்பரத்தை மாற்றச் சொன்னதாக தெரிகிறது. உடனடியாக மாற்றப்பட்ட விளம்பரம் வெளியிடப்பட்டது.
(அருகில் உள்ள படத்தில் இருப்பது சிகரெட்டுடன் வந்த விளம்பரமும், சிகரெட் இல்லாமல் வந்த விளம்பரமும்).