விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? | நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? | 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் | பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் |
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண். இவரும் பாடகர்தான். சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னை 28, குங்குமபூவும் கொஞ்சும் புறாவும், ஆரண்ய காண்டம் உள்பட சில படங்களை தயாரித்தார். சினிமா வாய்ப்பில்லாத காலகட்டத்தில் சரண் ஊஞ்சல், அண்ணாமலை தொடர்களில் நடித்தார். அதன்பிறகு டி.வியில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தீவிர படத் தயாரிப்பில் இறங்கினார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
வருகிற 23ந் தேதி முதல் சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சிரீயலில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரேணுகா, காயத்திரி நடிக்கிறார்கள். நிறைய புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். 300 எபிசோட்களை கொண்ட இந்த தொடரை பிரபு இயக்குகிறார். தற்போது படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
"இந்த தொடருக்கு 33 வயது நடுத்தர வயது இளைஞர் தேவைப்பட்டார். சரணை கேட்டபோது தயங்காமல் ஒத்துக் கொண்டார். இரண்டு படங்களை தயாரித்து வரும் அவர், அதற்கிடையில் இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்கிறார் இயக்குனர் பிரபு.