மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாரூக்கான் மீண்டும் சட்டை அணியாமல் தோன்றி நடிக்கப் போகிறார். நடிகைகளுக்கு மட்டும்தான் கிளாமரா நடிகர்களுக்கு இல்லையா எனக் கேள்வி கேட்பவர்களுக்கு உருவாக்கப்பட்டதுதான் ஆண் நடிகர்கள் 'சட்டை' அணியாமல் நடிப்பது. பல பெண் ரசிகைகளை இதன் மூலம் கவர முடியும் என்கிறார்கள். அதனால்தான் பெண் இயக்குனரான பராகான் இயக்கிய 'ஓம் சாந்தி ஓம்' படத்தில், சட்டை அணியாமல் ஒரு பாடல் காட்சியில் நடித்து அசத்தினார் ஷாரூக்கான். அதோடு சிக்ஸ்பேக்கில் தோன்றி அதன்பின் பல ஹீரோக்களையும் சிக்ஸ்பேக் பின்னால் ஓட வைத்தார்.
தற்போது பராகான் இயக்கி வரும் 'ஹேப்பி நியு இயர்' படத்தில் மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கப் போகிறாராம். ஆனால், இந்த காட்சி பாடலிலா அல்லது படத்தில் வரும் ஒரு காட்சியிலா என்பது இன்னும் முடிவாகவில்லையாம். இந்த 'ஹேப்பி நியு இயர்' படத்தில் மீண்டும் 'ஓம் சாந்தி ஓம்' கூட்டணிதான் இணைகிறது. பராகான் இயக்குகிறார், ஷாரூக்கான் - தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் பராகான் - ஷாரூக்கான் கூட்டணி மூன்றாக முறையாக இணைகிறது. அபிஷேக்பச்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.
இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாக உள்ளது. பராகான் - ஷாரூக்கான் கூட்டணி இந்த படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது.