ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'வணக்கம் சென்னை', 'வேலையில்லா பட்டதாரி' உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படங்களில் பாடல் காட்சிகளில நடித்திருக்கும் அனிருத், தற்போது சான்சே இல்லை என்றொரு படத்தில் நாயகனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விஜய்யின கத்தி படத்திற்கு இசையமைத்து வரும் அவர், தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், ஒரு பாடல் காட்சிகளில் விஜய்யுடன் சிறிது நேரம் நடனமாடி விட்டு சென்றதைப்போன்று தானும், இப்படத்தில் விஜய்யுடன் நடனமாட ஆசைப்படுகிறாராம். இந்த விசயத்தை ஆரம்பத்திலேயே விஜய்யின் காதில் போட்டு விட்டாராம். ஆனபோதும், இதுவரை அதுபற்றி முருகதாசிடமிருந்து எந்தவொரு அழைப்பும் அனிருத்துக்கு இல்லையாம்.
அதையடுத்து, படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பாடலாக பதிவு செய்து கொடுத்து வந்த அனிருத், விஜய் பாடும் ஒரு பாடலை மெகா ஹிட்டாக்கி விட வேண்டும் என்று தற்போது ஏராளமான டியூன்களை போட்டுத்தள்ளிக்கொண்டிருக்கிறார். இந்த டியூன்களில் ஒன்றைத்தான் ஏ.ஆர்.முருகதாசும்,விஜய்யும் செலக்ட் பண்ணப்போகிறார்களாம்.
அதனால், அந்த டியூன் ஓ.கே ஆனதும், அந்த பாடலில் ஏதோ ஒரு மூலையிலாவது தான் முகம் காட்ட வேண்டும் என்ற தனது ஆசையை மீண்டும் அவர்கள் முன்பு எடுத்து வைக்கப்போகிறாராம் அனிருத்.