ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் என 5 பேர் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த், பரத், நகுல் ஆகிய 3 பேரும் அதன்பிறகு ஹீரோக்களாகவே நடித்து வருகின்றனர். இதில் சித்தார்த், பரத் இருவரும் முன்னணி நடிகர்களாகி விட்டனர். மேலும், தமன் தமிழ், தெலுங்கு படங்களில் தற்போது முன்னணி இசையமைப்பாளராகி விட்டார்.
ஆனால், அந்த 5 பேரில் ஒருவரான மணிகண்டனுக்கு மட்டும் அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் ஓடவில்லை. அதனால் பின்னர் படவாய்பே இல்லாமல் இருந்து வந்த மணிகண்டன், இப்போது வில்லனாக உருவெடுத்துள்ளார்.
முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் நடித்த ஹாரிஸ் நாயகனாக நடிக்கும காதல் 2014 என்ற படத்தில் வில்லனாகியுள்ள அவர், தனக்கு எப்படியும் ஹீரோ வேடம் கிடைக்கும் என்று இதுவரை தனது உடம்பை ஸ்லிம்மாக பராமரித்து வந்த மணிகண்டன், இப்போது வில்லனுக்காக உடல் எடையை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்.
அதோடு, தனது நண்பர்களான சித்தார்த், பரத், நகுல் ஆகியோரிடம் நீங்கள் நடிக்கும் படத்தில் எனக்கு வில்லன் வேடம் வாங்கிக்கொடுங்கள் என்றும் உரிமையோடு சிபாரிசு கேட்டு வருகிறார் மணிகண்டன்.