சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இயக்குநர் விஷ்ணுவர்தனும், யாமிருக்க பயமே பட நாயகன் கிருஷ்ணாவும் அண்ணன் தம்பிகள். அண்ணன் விஷ்ணுவர்தன் அமைதியான ஆள் என்றால், தம்பி கிருஷ்ணா அலட்டல் பார்ட்டி. அலிபாபா, கற்றது களவு என கிருஷ்ணா ஆரம்பத்தில் நடித்தது எல்லாமே அட்டர் ப்ளாப் படங்கள்தான். அப்படியும் அநியாயத்துக்கு அலட்டல் பார்ட்டியாக இருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அவர் நடித்த கழுகு சுமாராக ஓடியது. கடைசியாய் அவர் நடித்த யாமிருக்க பயமே வெற்றிப்படம். சொல்லவா வேணும்? தன்னை விஜய், அஜித் ரேன்ஜுக்கு நினைத்துக் கொண்டு அநியாயத்துக்கு பந்தா பண்ணுகிறாராம் கிருஷ்ணா. பார்ட்டிகளுக்கு செல்லும்போது அங்கே இவரது சத்தம் தான் கேட்கிறதாம். பார்ட்டிக்கு வந்தவர்கள் முகம் சுழிக்கும் வகையில் கிருஷ்ணாவின் பிகேவியர் இருக்கிறதாம். இவர் இப்படி என்றால் இவரது அப்பாவான தயாரிப்பாளர் பட்டியல் சேகர் தன் மகனை ரஜினி ரேன்ஜுக்கு பில்ட் அப் பண்ணுகிறாராம். அப்பாவும் மகனும் ஆடுகிற ஆட்டம் தாங்க முடியல என்று சக தயாரிப்பாளர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.