ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்சினிமாவில் பரவலாக அறியப்பட்ட பெண் பாடலாசிரியர் - தாமரை. அறியப்படாத பண் பாடலாசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் தேன்மொழியும் ஒருவர்.
நர்ஸாக பணியாற்றிக் கொண்டே பாடலாசிரியராக இயங்கி வந்தார் இவர். அதனாலோ என்னவோ பெரிய அளவில் இவரால் பிரகாசிக்க முடியவில்லை. தற்போது முன்னணி வரிசையில் இருக்கும் இளம் இயக்குநர் ஒருவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. அதன் பிறகு பாரதிராஜாவின் உதவியாளராக இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவரான முத்துவிஜயனை தேன்மொழி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செங்கல்பட்டு அருகில் உள்ள உத்திரமேரூர் கோவிலில் நடைபெற்ற இத்திருமணத்தை தேன்மொழியின் தந்தை ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தது வேறு யாருமல்ல... பாரதிராஜாவேதான்.