பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சுந்தர் .சி இயக்கத்தில், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'கலகலப்பு' படம், தெலுங்கில் 'ஜம்ப் ஜிலானி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நாளை வெளியாக உள்ளது. சத்தி பாபு இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஜய் எபினேசர் இசையமைத்துள்ளார். இயக்குனர் சத்தி பாபு, நரேஷ் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது.
'குறும்பு', 'போராளி' படங்களில் நடித்த நரேஷ் இந்த படத்தில் நாயாகனாக நடித்துள்ளார். தெலுங்கிற்காக கதையில் மாற்றங்களை செய்திருக்கிறார்கள். அதாவது, தமிழில் இடம் பெற்ற விமல், சிவா இரண்டு கதாபாத்திரங்களையும் தெலுங்கில் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் நரேஷ். தெலுங்குத் திரையுலகில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் ஜொலிப்பவர்தான் இந்த நரேஷ். சமீபத்தில் கூட இவர் நடித்து வெளியான 'லட்டு பாபு' என்ற படத்தில் மிகவும் குண்டான மனிதராக நடித்து அசத்தியிருந்தார்.
அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தில் இஷா சாவ்லா நடித்துள்ளார். ஓவியா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்வாதி தீட்சித் நடித்துள்ளார். தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே கொடுப்பதால் நரேஷுக்கு ஆந்திராவில் தனி வரவேற்பு உண்டு. தமிழில் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்பதால் இந்த படத்திற்கு அங்கு அதிகமாகவே எதிர்பார்ப்பு உள்ளதாம். நரேஷ் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் வியாபார ரீதியாக நல்ல வசூலைக் குவிக்கவில்லையாம். அந்த குறையை இந்த படம் போக்கும் என்கிறார்கள்.