ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான திலீப், 1998ம் ஆண்டு அப்போது முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.
கடந்த சில காலமாக திலீப்பும், மஞ்சு வாரியாரும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். சிறந்த டான்சரான மஞ்சு வாரியார் மீண்டும் நடனமாட வந்ததும், நடிக்க வந்ததும்தான் தம்பதிகளுக்கிடையே பிரிவை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மலையாளத் திரையுலகமே ஆச்சரியத்தில் பார்த்து வந்த இந்த தம்பதியரின் பிரிவு, திரையுலகில் மட்டுமல்லாது, மக்களிடமும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனிடையே, திலீப் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நேற்று விண்ணப்பித்துள்ளார். விவாகரத்து வழக்கை மீடியாக்களில் பிரபலத்த விரும்பாத திலீப் வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு நீதிமன்றமும் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. ஜுன் 23ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவி இயக்குனராக இருந்து நடிகரானவர் திலீப். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகராக மாற்றிக் கொண்டார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு சிறந்த நடனக் கலைஞராக விளங்கிய மஞ்சு வாரியார் 1995ம் ஆண்டு மலையாளத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். குறுகிய காலத்திற்குள் பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மஞ்சு வாரியார் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
நல்ல தம்பதியராக விளங்கிய இந்த ஜோடியின் பிரிவை மலையாளத் திரையுலகம் வருத்தத்துடனேயே பார்க்கிறது.