ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருக்கும் சன்னி லியோன், தற்போது ஜெய் நடித்துள்ள வடகறி, விமல் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்கள் மூலம் கோடம்பாக்கத்திலும் கோலோச்சியிருக்கிறார். அம்மணி உலக அளவில் ரசிகர்களை பதம் பார்த்தவர் என்பதால் இந்த படங்களில் சன்னியுடன் நடனமாடுவதற்கு முன்பு ஜெய், விமல் இருவரும்கூட சற்றே தடுமாறித்தான் போனார்கள்.
இருப்பினும், ஒருவழியாக கோதாவில் இறங்கி அவருடன் செமத்தியான ஆட்டம் போட்டுவிட்டு எதையோ சாதித்து விட்ட உற்சாகத்துடன இருக்கிறார்கள். இந்த நிலையில், கோலிவுட்டின் மூன்றாம் தட்டு நடிகர்களுடன் குத்தாட்டம் ஆடியிருக்கும் சன்னிலியோனுக்கு இப்போது இன்னும் மெகா ஹீரோக்களுடன் கதாநாயகியாக வேண்டும். குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்கிற அடுத்தக்கட்ட ஆசைகள் உருவாகியிருக்கிறதாம்.
அதனால், ஷங்கர் உள்ளிட்ட சில மெகாப்பட டைரக்டர்களை பட்டியலிட்டு சான்ஸ் கேட்டு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார். மேலும், வடகறிக்கு ஆட்டமாட 30 லட்சம் வாங்கிய சன்னி லியோன், ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவுக்கு 40 லட்சம் வாங்கியிருக்கிறாராம். ஆனால், இதையடுத்து நடிக்கும் படத்துக்கு 50 லட்சம் கேட்பாராம். அதேசமயம் கதாநாயகியாக திறமை காட்ட வேண்டுமென்றால் பல கோடிகள் புரள வேண்டுமாம்.
இதெல்லாம் கோலிவுட்டுக்கு கட்டுப்படியாகுமா? என்று கேட்டால், நான் கோலிவுட் என்ற சிறிய வட்டத்திற்குள் நடித்தாலும் என் மார்க்கெட் ரொம்ப பெருசாச்சே. நான் நடிக்கிற படங்களை உலகத்தில் எந்த மூலையில் போட்டாலும் ஓடுமே என்று பெரிய பிலடப் கொடுக்கிறாராம் சன்னி.