Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

திரையுலகில் எம்.ஜி.ஆர். சந்தித்த பிரச்னைகள்!

26 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திர நாயகன் எம்.ஜி.ஆர். தனது படங்களில் தான் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றால் அதை பார்த்து ரசிகர்கள் கெட்டு விடுவார்கள் எனக் கருதி, அதுபோன்ற காட்சிகளை தவிர்த்து ரசிகர்கள் நலனில் அக்கறையுடன் சினிமா வாழ்க்கையை நகர்த்திய அவர், அரசியலிலும் கால் பதித்து வெற்றிகளை குவித்தார். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை, புதுப்பொலிவுடன் தொகுத்து `நாயகன்' என்ற பெயரில் வழங்கி வருகிறது, ஜீ தமிழ் தொலைக்காட்சி.

வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, மக்கள் திலகமாக நடிப்பை தொடர்ந்து, அரசியல் தலைவராக மக்களிடம் நிலைத்த எம்.ஜி.ஆரின் வரலாறு பற்றியது. சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். அதை தொடர்ந்து சந்தித்த பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்? அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் எப்படி கிடைத்தன? எந்த திரைப் படத்தில் புகழ் பெற்றார்? எந்தெந்த படங்கள் வெற்றி ‌பெற்றன? போன்ற பல சுவாரசிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது இந்த நிகழ்ச்சி. ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆர்., நடித்த படங்களின் அபூர்வ ஸ்டில்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது ஹைலைட்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

GEORGE - PONDICHERY..RAINBOWNAGAR,இந்தியா
21 மே, 2011 - 11:41 Report Abuse
 GEORGE எம்.ஜி.ஆர். போல் மக்களை அதிகம் நேசித்த ஒருவரை காண்பது இனி மிகவும் அரிது...எம்.ஜி.ஆர்.இன்று உயிருடன் இருந்து இருந்துருந்தால் தமிழ் நாடு மக்களுக்கு நிறைய நல்லது செய்துருவார்.எம்.ஜி.ஆரின் மறைவு இ ன்றும் மக்களுக்கு பேர் இழப்புதான்.எம்.ஜி.ஆர்.மக்களுகாக வாழ்ந்த ஒரு உன்னதமான இதயம் ......
Rate this:
கே. வரதராஜன் - Hartford,யூ.எஸ்.ஏ
15 மே, 2011 - 03:14 Report Abuse
 கே. வரதராஜன் எம்ஜிஆர் என்று சொன்னால் இன்றும் தமிழ்நாட்டில் மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற ஒரு மாபெரும் மனிதர். அவர் சினிமா உலகில் செய்த புரட்சி பலவிதம், அதில் ஒன்றுதான் தந்து படங்களில் எவ்வித தீய பழக்கங்களையும் காண்பிக்காமல் இருக்க செய்தது. பின்னர் மக்கள் மனதில் இடம் பிடித்த அவர் அரசியலிலும் அதேபோல் அரிசி, கோதுமை, பால் மற்றும் அத்த்யாவசிய பொருட்களின் விலையை ஏற்றாமல் பார்த்துக்கொண்டார். அதுபோன்ற ஒரு தலைவன் இனிமேல் பிறப்பது அரிது. ஜெயலலிதா அதுபோல் பார்த்துக்கொண்டால் அவரும் நல்ல பெயர் பெறுவார் என்பது உறுதி.
Rate this:
cyrusdass - ipoh,மலேஷியா
14 மே, 2011 - 17:44 Report Abuse
 cyrusdass என்றும் நமது மனதில் நீங்கா இடம் பெற்றவர் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. வாழ்க வளர்க அவர்தம் நினைவுகள் .
Rate this:
Ranjith Kuamr - chennai ,இந்தியா
14 மே, 2011 - 11:12 Report Abuse
 Ranjith Kuamr நான் எனது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மிகவும் முக்கிய காரணம் ”
Rate this:
rt - dgfdxfg,இந்தியா
30 ஏப், 2011 - 10:50 Report Abuse
 rt உண்மையில் எம்.ஜி.ஆர் நல்ல thalaivar
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in