ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
150 கோடியில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம், முதல் மூன்று நாட்களில் சுமார் 42 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. அதை வைத்து ரஜினியின் முந்தைய படமான எந்திரனின் வசூலை கோச்சடையான் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவிவிட்டது என்று கூறி வருகிறார்கள் திரைப்பட வியாபாரிகள்.
கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் சொல்வதை பார்த்தால் திரைப்பட வியாபாரிகளின் கூற்று உண்மையோ என தோன்றுகிறது.
கோச்சடையான் படத்தின் வர்த்தக வெற்றி குறித்து வெளிப்படையாய் பேசி இருக்கிறார் தயாரிப்பாளர்.
"குறுகிய கால அவகாசத்திலும், குறைந்த பட்ஜெட்டிலும் கோச்சடையான் படத்தைத் தயாரித்தோம். எனவே படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருப்பது உண்மைதான். இப்போது படத்தைப் பார்க்கும்போது, இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கோச்சடையான் அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.
அதே சமயம், மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஹிந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் கோச்சடையான் படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மைதான். தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறோம்" என்று சொல்கிறார் முரளி மனோகர்.
அப்ப கோச்சடையான் படம் ப்ளாப் என்று சொல்வது உண்மைதானோ?