Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே மாதத்தில் இரண்டு படம் ரிலீஸ்..உற்சகாத்தில் ஜெய்!

31 மே, 2014 - 14:51 IST
எழுத்தின் அளவு:

இளம் கதாநாயக நடிகர்களில் சற்று பின் தங்கியே இருக்கிறார் ஜெய். இத்தனைக்கும் ஜெய் நடித்த சுப்பிரமணியுபரம், சென்னை 60028, ராஜாராணி போன்ற பல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால் எந்த வெற்றியையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை தொடர்பு கொண்டால் எந்நேரமும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதும் ஜெய்யின் மந்தநிலைக்கு முக்கிய காரணம். அதனாலேயே அவரது கேரியர் கிராஃப் ஏற்றம் இல்லாமலே காணப்பட்டது.


இந்நிலையில் வடகறி, திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய இரண்டு படங்களில் நீண்டகாலமாக நடித்து வந்தார். தயாநிதி அழகிரி தயாரித்த வடகறி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களாகியும் அப்படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு தகவலுமில்லை. இன்னொரு பக்கம், ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகியும் வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்தது - திருமணம் எனும் நிக்காஹ் படம்.


ஒருவழியாக, திருமணம் எனும் நிக்காஹ் படம் இம்மாதம் வெளியாக இருந்தது. திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜெய் நடித்த வடகறி படத்தையும் ஜூன் மாதம் திரைக்குக் கொண்டுவர இருக்கிறார்கள். ஆக,வடகறி, திருமணம் எனும் நிக்காஹ் என ஜெய் நடித்த இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. உற்சாகத்தில் இருக்கிறாராம் ஜெய்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in