ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தயாரிப்பாளர்களில் அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் யார் என்றால்.... நடிகர் தனுஷ்தான். நடிகராக பல கோடிகள் சம்பளம் வாங்கும் தனுஷ், இன்னொரு பக்கம் படத்தயாரிப்பிலும் செமத்தியாய் அறுவடை செய்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாணா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ். இவ்விரு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் மதுரையைச் சேர்ந்த பைனான்சியரிடம் சில கோடிக்கு விற்றுவிட்டாராம். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாணா படம் தொடங்குவதற்கு முன்பே இந்த டீல் முடிந்துவிட்டதுதான்.
சாட்டிலைட் உரிமையை விற்ற வகையிலேயே பெரும் தொகையைப் பார்த்த தனுஷ், வேலையில்லா பட்டதாரி, டாணா ஆகிய இரண்டு படங்களின் நெகட்டிவ் ரைட்ஸை, மான் கராத்தே படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடம் மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டார். கையிலிருந்து பணத்தை செலவு செய்யாமலே படங்களை ஆரம்பித்து, அந்தப் படங்களை முடிப்பதற்கு முன்பே சாமர்த்தியமாக பல கோடி லாபத்தையும் சம்பாதித்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
வியாபாரத்தில் கில்லாடியாகிவிட்டார்!?