ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர்கள் சந்தானம்-சிவகார்த்திகேயன் இருவருமே ஆரம்ப காலத்தில், விஜய் டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள். அதன்மூலம் பிரபலமாகி பின்னர் சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், அவர்கள் இருவருமே இதுவரை ஒரு படத்தில்கூட இணைந்து நடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தவிர மற்ற ஹீரோக்களுடன் சந்தானமும், சந்தானம் தவிர மற்ற காமெடியன்களும் சிவகார்த்திகேயனும் நடித்து வருகின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்கிடையே விஜய் டி.வியில் இருந்தபோதில் இருந்தே ஏதோ உள்குத்து சண்டை இருக்கிறது. அதனால்தான் அவர்கள் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்று தொடர்ந்து மீடியாக்களில் செய்திகள் பரவிக்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, சந்தானத்துடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று முன்பு கூறியிருந்தார்.
அதேபோல் இப்போது சந்தானத்திடம், அதுகுறித்து கேட்டால், சிவகார்த்திகேயனுக்கும், எனக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை அவ்வளவுதான். அப்படி நேரம் வரும்போது கண்டிப்பாக அவருடன் இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்தார்.