மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அஜீத் அறிமுகமான அமராவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கன்னடத்து பைங்கிளி சங்கவி. விஜய் ஹீரோவாக நடித்த ரசிகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரும் சங்கவிதான். அதன் பிறகு நான்கு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சங்கவி. கடைசியாக சாவித்ரி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
சங்கவிக்கு பலமுறை திருமண ஏற்பாடுகள் நடந்தும் கடைசி நேரத்தில் அது முறிந்திருக்கிறது. அவருக்கு சரியான பொருத்தம் அமையவில்லை. ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஹா என்ன பொருத்தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துவிட்டார். இது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ஜோடிப் பொருத்தம் என்ற நிகழ்ச்சியின் மறுபதிப்புதான் இந்த நிகழ்ச்சி. இதில் கலந்து கொள்ளும் கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஒற்றுமை, புரிதல், விட்டுக்கொடுத்தலை பரிசோதித்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி. தற்போது இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.