Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பேசும் தேசிய விருது பெற்ற ஆதாமிண்ட மகன் அபூ!

19 மே, 2014 - 17:57 IST
எழுத்தின் அளவு:

2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "ஆதாமிண்ட மகன் அபூ". 4 தேசிய விருதுகள், 4 மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்த இந்தப்படம் இப்போது தமிழில், 'ஆதாமின் மகன் அபூ' என்ற பெயரில் வெளியாகிறது.


பள்ளி வாசல் திண்னையில் அத்தர், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவருக்குள் இப்படி ஒரு கனவு. தன் 65 வயதான மனைவியை அழைத்துக் கொண்டு எப்படியாவது ஹஜ் பயணம் சென்றுவிட வேண்டும் என்பது தான் அவருக்குள்ள தணியாத ஆசை. அதற்காக அவர் படும்பாடுகள் தான் படத்தின் கதை. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இப்படி ஒரு கதையை யாரும் சொன்னதில்லை.


இயக்குநர் சலீம் அகமதுக்கு இது ஒரு புதிய அனுபவக்களம். இந்தப் படத்தை உருவாக்க பத்தாண்டுதவம் இருந்திருக்கிறார். இவர் ஒரு மேடை நாடகக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கியவர். டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த அனுபவமே இந்தக் கதைக் களத்தை உருவாக்கித் தந்தது என்கிறார் சலீம் அகமது.


கதை நாயகனாக வரும் சலீம் குமார் அச்சு அசலாக ஓர் உயிருள்ள பாத்திரமாக உருமாறி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜரினா வஹாபும் ஒரு நிஜமான மலபார் முஸ்லீம் குடும்பத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதையாய் அமைந்துள்ளது. மது அம்பட்டின் சிறப்பான ஒளிப்பதிவும் நேர்த்தியான பின்னணி இசையும் படம் பார்ப்பவர்கள் கவனத்தைச் சரியான பாதையில் வழி நடத்திச் செல்கின்றன.


சிறந்த படம். நடிகர், ஒளிப்பதிவு, பின்னணி, இசைக்கு என 4 தேசிய விருதுகளையும் 4 கேரள அரசு விருதுகளையும் பெற்ற இப்படம் பல்வேறு அமைப்புகள் விமர்சகர்களின் விருதுகள் என சுமார் 30 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்வளவு பெருமைகள், சிறப்புகள் பெற்ற "ஆதாமிண்ட மகன் அபூ" படத்தை "ஆதாமின் மகன் அபூ" என்ற பெயரில் தமிழில் ஹனிபா மூவீஸ் விரைவில் தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in