ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அந்நியன் படத்தையடுத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்- சீயான் விக்ரம் இணைந்துள்ள படம் ஐ. மதராசப்பட்டினம் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்துவிட்டது. கடைசியாக, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் இருந்தது. அதையும் சமீபத்தில் அவரை வரவைத்து படமாக்கி விட்டனர்.
ஆக, பூசணிக்காய் உடைத்து விட்ட ஷங்கர். இப்போது கிராபிக்ஸ் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார். இதுவரை இந்தியன், அந்நியன், எந்திரன் என எத்தனையோ மெகா படங்களை எடுத்த ஷங்கர், அப்படங்களுக்காக அயல்நாடுகளில் முகாமிட்டு தான் எதிர்பார்க்கிற ரிசல்ட் வரும் வரையில் கிராபிக்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
அதேபோல், இந்த படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளில் தற்போது முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். சில காட்சிகளில் செய்த கிராபிக்ஸ் பணிகளில் அவர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவிலலையாம். அதனால், எப்போதுமே காம்ப்ரமிஸ் ஆகாதவரான ஷங்கர், அந்த காட்சிகளை கடாசி விட்டு, இப்போது மீண்டும் அதே காட்சிகளுக்கான கிராபிக்ஸ் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
அதனால்தான், கடந்த மாதமே படத்தின் ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டிருந்தவர், இப்போது மொத்த வேலைகளும் முடிந்த பிறகு மற்ற வேலைகளில் இறங்கலாம் என்று ஆடியோ ரிலீசை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கும் ஷங்கர், ஜூன் மாதம் ஆடியோவை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம்.