ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 இடங்களில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலிதாவுக்கு சினிமா சங்கங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றன.
நடிகர் சங்கம்: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின் இயக்கத்தை நல்ல முறையில் வழிநடத்திச் சென்று மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்தி, தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்ககூடிய ஒரே தலைவி ஜெயலலிதாதான் என்பதை நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். அதற்காக தமிழக வாக்காளர்களுக்கு நன்றியும் முதல்வர் அம்மா அவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெப்சி: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் "நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று தமிழக மக்களின் மனதில் நிலையான இடம் பெற்று நாடு போற்றும் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்களின் வெற்றிப் பயணம் தொடர தென்னிந்திய திரைப்பட சம்பளத்தின் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம்" என்று கூறியுள்ளனர்.
சேமபர்: தென்னிந்திய திரைப்பட வர்த்த சபையின் சார்பில் அதன் தலைவர் பி.சசிகுமார், செயலாளர்கள் காட்டரகட்ட பிரசாத், அருள்பதி, பொருளாளர் முரளிதரன் ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிக்கையில் "அம்மாவின் உழைப்புக்கு, திறமைக்கு, கிடைத்த வெற்றி. பாராளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ள அம்மாவுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளனர்.
இதுதவிர ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் அறிக்கை, டுவிட்டர், பேஸ்புக் மூலம் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.