ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிங்காரவேலன், எஜமான், சின்ன கவுண்டர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் அப்துல் ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் ஒளிச்சித்திரம். விஷ்வா, காம்னா சிங் என்ற புதுமுகங்களுடன் தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உக்ரைன் நாட்டு அழகி சிரினா ஒரு பாட்டுக்கு ஆடி உள்ளார்.
"பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அழகான மனைவி அமைந்து விட்டால் இந்த சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் கொடூரமானவை. அன்பாக பேசியே வீழ்த்த நினைப்பார்கள். அப்படி ஒருவனின் கதை இது. ஒரு மாற்றுத் திறனாளியின் அழகான மனைவியை அடைய நினைக்கும் வில்லனை எதிர்த்து போராட முடியாத மாற்றுத் திறனாளி எப்படி அவன் திட்டத்தை முறியடிக்கிறார் என்பதுதான் கதை. சென்னை, குற்றாலம் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நல்ல கருத்தை சொல்லும் படம். கமர்ஷியலுக்கு குத்துப்பாட்டு உள்ளிட்ட சில அம்சங்களை சேர்த்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் அப்துல் ரகுமான்.