ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குங்குமபூ தொடரில் அறிமுமான ரிந்தியா இப்போது பிசியான சின்னத்திரை நடிகை. தற்போது குறிஞ்சிமலர் தொடரின் ஹீரோயினாக நடித்து வரும் ரிந்தியா, மலையாள சீரியல்களிலும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடர் மலையாளத்தில் பாக்யலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதில் ரிந்தியா ஹீரோயினாக நடிக்கிறார். இதனால் மாத்திற்கு 15 நாட்கள் சென்னையிலும் 15 நாட்கள் கேரளாவிலுமாக பிரித்து கால்ஷீட் கொடுத்து வருகிறார்.
"தமிழ்நாட்டைப்போலவே கேரளாவிலிலும் சீரியலுக்கு இப்போது மவுசு கூடியிருக்கிறது. ஒரே நாளில் இரண்டு முன்று எபிசோட்களை எடுத்து விடுகிறார்கள். அதனால் மலையாள சீரில்களில் நடிப்பது எளிதாக இருக்கிறது. தமிழ், மலையாளம் இரண்டு மொழி ரசிகர்களின் உள்ளத்தில் இடம்பெற வேண்டும் என்பதே லட்சியம்" என்கிறார் ரிந்தியா.
ரிந்தியா, சினிமாவுக்குரிய அழகுடன் இருப்பதால் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை என்கிறார்கள்.